
பொதுவான நோக்கில் மொழியானது தொடர்பாடலுக்கானதாக ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து, ஏன் எமக்கு எமது மொழியின் மேல் அளவுகடந்த உணர்வு மேலெழுந்து அது எம்மை ஆட்கொள்ளும் அளவிற்குச் செல்கிறது? உளவியல் ரீதியாக நாம் ஏன் அதற்குக் கட்டுண்டு விடுகிறோம்? ஏன் நாம் தமிழர் என்று உணர்கிறோம்? ஏன் நாம் எமது மொழியின் மூலம் எமது சுய அடையாளத்தை நிலை நிறுத்துகிறோம்? நாம் எமது வரலாற்றுத் தொடர்ச்சியின் பால் ஈர்க்கப்பெற்று அதன் பழம் பெருமையில் அதன் தொன்மையில் எம்மை ஒன்றிணைத்துக் கொள்கிறோமா?
இதனால் தான் நாம் எம்மைத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகிறோமா? இல்லை மொழிவாரித் தேசியங்களின் பாற்பட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் தான் நாம் எம்மைத் தமிழர் என்கிறோமா? எமது வாழ்வை வளப்படுத்த நாம் எம்மைத் தமிழர் என்கிறோமா? இல்லை எம் பழந்தொன்மையை மீள நிலை நாட்ட எம்மைத் தமிழர் என்கிறோமா?
நாம் ஏன் எம்மைத் தமிழர் என்கிறோம்?
No comments:
Post a Comment